அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் : உற்சாகமாக கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்

குன்னூரில், ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேத்ரின், டால்பின் நோஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் : உற்சாகமாக கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்
x
குன்னூரில், ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேத்ரின், டால்பின் நோஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள், புகைப்படம் எடுக்கவும், செல்பி எடுக்கவும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், மலைப்பகுதிகளில் உள்ள காட்சிமுனைகளில் இருந்து ஆதிவாசி கிராமங்கள், சமவெளி பகுதிகள், இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை அவர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியுள்ள குன்னூரில், வியாபாரமும் சூடுபிடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்