அத்திவரதர் தரிசனம் - விரிவான ஏற்பாடு : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வி.ஐ.பி. தரிசனம் காலை 5 மணிமுதல் மாலை 5 மணி வரை என்றும், 6 மணிக்கு மேல் ஆன்-லைன் டிக்கெட் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மாலை 5 மணிக்கு மேல் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் அவர் தெளிவு படுத்தினார். சுமார் 33 பேர் உடல் சோர்வு காரணமாக மயக்கம் அடைந்ததாகவும் அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story