குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் : மத்திய அரசு முடிவை ஏற்க முடியாது - ராமதாஸ்

குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு மீண்டும் முடிவு செய்துள்ளதை ஏற்க முடியாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் : மத்திய அரசு முடிவை ஏற்க முடியாது - ராமதாஸ்
x
குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு மீண்டும் முடிவு செய்துள்ளதை ஏற்க முடியாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் இத்தகைய உயர்பதவிகளுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காவே இவ்வாறு செய்யப்படுகிறது என்று முன்வைக்கப்படும் வாதங்களுக்கு மத்திய அரசின் வேகம் வலுசேர்ப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். எனவே, தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று, ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்