வேலூரில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

வேலூரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
x
வேலூரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கி உள்ளார். வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு கிராமத்தில் வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், தொடர்ந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ராமநாயக்கன் பேட்டை, ஆவாரங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு வாக்கு சேகரித்தார் முன்னதாக ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்