"பேருந்துகளை அலங்கரிப்பதைவிட பழுதடைந்தவைகளை புதுப்பிக்கலாம்" - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

பேருந்துகளை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதைவிட பழுதடைந்தவைகளை புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பேருந்துகளை அலங்கரிப்பதைவிட பழுதடைந்தவைகளை புதுப்பிக்கலாம் - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
பேருந்துகளை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதைவிட பழுதடைந்தவைகளை புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன்  அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பேருந்துகளில் பல வண்ணங்களில் விளக்குகளின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால், எதிர் திசையில் வருபவர்களின் கவனத்தை திசை திருப்புவதாக கூறினர். இதுபோன்ற அலங்காரங்களுக்கு செலவிடுவதைவிட பழுதடைந்துள்ள பேருந்துகளை புதுப்பித்து இயக்கினால் பயணிகளுக்கு பயன்தரும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்