மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஒரு வாய்ப்பு தாருங்கள் - அன்புமணி

தமிழகத்தின் நிலையை தலைகீழாக மாற்றவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
சென்னை தியாகராய நகரில் உள்ள முத்துரங்கன் சாலையில் பா.ம.க சார்பில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முத்துவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் இளைஞரணி தலைவரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும், தன் கால் படாது என சபதம் எடுத்ததோடு, சொன்ன சொல் தவறாமல் இதுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர்  ராமதாஸ்  என்றார். நாட்டிலேயே மூன்று இட ஒதுக்கீட்டையும்,  ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையையும் பெற்றுத் தந்த ஒரே தலைவர்  ராமதாஸ் மட்டுமே  என்றும் அன்புமணி தெரிவித்தார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்த பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாக பிரதமர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்