இரவில் தங்க சப்பரத்தில் வலம் வந்த ஜெயந்தி நாதர் -கிரிபிரகாரத்தில் கூடியிருந்த பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி நேற்றிரவு ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் வலம் வந்தார்.
இரவில் தங்க சப்பரத்தில் வலம் வந்த ஜெயந்தி நாதர் -கிரிபிரகாரத்தில் கூடியிருந்த பக்தர்கள் தரிசனம்
x
முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடிகிருத்திகை விழா  வெகுசிறப்பாக நடந்தது.இதனையொட்டி நேற்று அதிகாலை ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தீபாரதனைஉதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிக்கால அபிஷேகம் , உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஜெயந்தி நாதர்,  வள்ளி மற்றும் தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் கிரிபிராகரத்தை  சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். இதில்  திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்