தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் 2020 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தாமிரபரணி -  கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் 2020 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
x
தி.மு.க. முன்னாள் எம்.எல்ஏ. அப்பாவு,  இது தொடர்பாக தாக்கல் செய்திருந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கூடுதல் செலவிற்காக 872 கோடி ரூபாய் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரியுள்ளதால், கால அவகாசம் கோரப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்