அரசு மற்றும் தனியார் பேருந்தின் ஓட்டுநர்கள் இடையே மோதல்
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில், குறித்த நேரத்தில் பேருந்தை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், அரசு மற்றும் தனியார் பேருந்தின் ஓட்டுநர்கள் சண்டையிட்டு கொண்டனர்.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில், குறித்த நேரத்தில் பேருந்தை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், அரசு மற்றும் தனியார் பேருந்தின் ஓட்டுநர்கள் சண்டையிட்டு கொண்டனர். உக்கடத்தில் இருந்து தனியார் பேருந்து கிளம்ப வேண்டிய நேரத்தில்,அரசு பேருந்து கிளம்பியுள்ளது. இதனால் இரு ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, பொதுமக்கள் முன்னிலையில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் தனுஷ் காயமுற்றார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story