"சூர்யா கேள்வி கேட்க, இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது" - மயில்சாமி அண்ணாதுரை, விஞ்ஞானி

மனித மலத்தை அள்ளும் இயந்திரங்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடைபெறுவதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
x
மனித மலத்தை அள்ளும் இயந்திரங்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடைபெறுவதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் 'வானம் வசப்படும்' அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை,  விஞ்ஞானியான தமக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே தமக்கு தெரியும் என்றும், இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா கூறியதை தாம் முன்பே பேசியுள்ளதாக கூறினார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய குடிமகன் என்ற ஒரு தகுதி மட்டுமே,  கேள்வி எழுப்ப, சூர்யாவுக்கு போதுமான தகுதி என்று லெனின் பாரதி ஆவேசமாக பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்