பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு மாதத்திற்குள் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகன ஓட்டுநர்  மற்றும் அவரது உதவியாளர்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய   அமர்வு, உரிய விளக்கம் அளிக்கும்படி ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உத்தரவை அமல்படுத்தியது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒரு மாதத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த வேண்டும் - கண்ணப்பன்



அனைத்து தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்