3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
x
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை  கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 16 வது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 2021 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில், கணக்கெடுப்பின்போது ஏற்படும் சிக்கல்களை சரி செய்யும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து ஆகஸ்டு 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்