பேராசிரியை நிர்மலா தேவிக்கு மனநல சிகிச்சை : நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ள நிர்மலா தேவிக்கு மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கல்லூரி மாணவிகளுக்கு தவறான வழி காட்டியதாக கைதான பேராசிரியை நிர்மலாதேவி, சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, மனநிலை சரியில்லாதவரைப் போன்று நடந்து கொண்டார். இந்நிலையில், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 தினங்களாக, மனதை திடப்படுத்தவதற்காக தியான முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதால் யாரும் தொந்தரவு செய்யாத வண்ணம் தனியிடத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story