ரூ. 4.5 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடம் " - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தந்தி டிவி செய்தி எதிரொலியால் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
x
பணகுடி  பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீரெகுநாதபுரத்தில்  20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்து அபாயகரமான நிலையில் இருந்தது.  இதுகுறித்து கடந்த மே மாதம் 3ம் தேதி தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதையடுத்து  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  நான்கரை லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பழைய அங்கன் வாடிகட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.புதிய அங்கன்வாடி கட்டடம் சிறியதாக கட்டப்பட்டு வருவதாகவும். அங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அமர்ந்து படிக்க  இடவசதி போதாது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்