கார் டயர் வெடித்து விபத்து - நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஆண்டிபட்டி - தேனி சாலையில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அருகே 2 நாட்களுக்கு முன் கார் ஒன்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
x
ஆண்டிபட்டி - தேனி சாலையில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அருகே 2 நாட்களுக்கு முன் கார் ஒன்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. தினேஷ் குமார் என்பவர் ஓட்டிவந்த அந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதோடு, நீதிமன்ற பெயர் பலகையையும் உடைத்துக் கொண்டு நுழைந்தது. இந்த விபத்தில், நீதிமன்ற வாசலில் நின்றிருந்த காவல் துறை சார்பு ஆய்வாளர் மணிகண்டன், போடியை சேர்ந்த வழக்கறிஞர் முடியரசன் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்