ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
x
திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்தும், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கடந்த 23ஆம் தேதி பேரணி நடைபெற்றது. காவிரி படுகை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியின் முடிவில், ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதியளிக்காத நிலையில், பேரணி போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் மீது திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்