ஆடி 18 - ல் காவிரியில் தண்ணீர் வருமா? - தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் டெல்டா மக்கள்
ஆடி பதினெட்டு திருவிழா நெருங்கி வரும் நிலையில், காவிரியில் நீர் வருமா என ஏங்கி நிற்கின்றனர் டெல்டா பகுதி மக்கள்
ஆடி பதினெட்டாம் நாளன்று, பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரளும் டெல்டா மாவட்ட மக்கள், பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி போன்ற மங்கலப் பொருட்களை வைத்து காவிரித்தாயை வழிபடுவது வழக்கம். தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழா, காவிரியாற்று வெள்ளம் போலவே, காவிரி கரையோர மக்களிடம் மகிழ்ச்சியை கரை புரண்டோட வைக்கும் என்பது ஐதீகம், ஆனால், பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு உரிய நேரத்தில், தண்ணீரை வழங்காததாலும், நடப்பாண்டு, காவிரியாற்றில் கண்ணுக்கு எட்டிய தூரம் மணல் மட்டுமே தெரிகிறது என டெல்டா மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், ஆடி மாதம், 18ம்தேதியிலாவது காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுமா என மக்கள் ஏங்கி நிற்கின்றனர். வரும் ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ள ஆடிப்பெருக்குக்காக, மேட்டூர் அணையில் இருந்தாவது கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசுக்கு காவிரி டெல்டா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story