அத்திவரதர் தரிசனத்திற்கு மத்திய பாதுகாப்பு படை தேவை - உயர்நீதிமன்றத்தில் முறையீடு

அத்திவரதர் தரிசனத்துக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.
x
அத்திவரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு கூறியுள்ளது என்றும், ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் வரை இறந்திருக்கலாம் என உள்ளூர் வாசிகள் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, அத்திவரதர் தரிசன பாதுகாப்பு கோரிய வழக்கோடு சேர்த்து  விசாரிப்பதாக கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்