கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் கைது

சென்னையில் பட்டப்பகலில், கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
சென்னையின் முக்கியப் பகுதியான அரும்பாக்கம் அருகே அரசுப் பேருந்து ஒன்றை வழிமறித்த கல்லூரி மாணவர்கள், பேருந்துக்கள் இருந்த சக மாணவர்களை சரமாரியாக வெட்டினர். தாக்குதல் காரணமாக பேருந்தில் இருந்து இறங்கிய ஓடிய மாணவர்களை அவர்கள் ஓடஓட விரட்டி வெட்டினர். இதில், படுகாயமடைந்த வசந்தகுமார் என்ற 2ஆம் ஆண்டு மாணவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோதல் காரணமாக பேருந்துக்குள் இருந்த பயணிகள், உயிர் பயத்தில் செய்வதறியாது நிலைகுலைந்து போயினர். விசாரணையில், பச்சையப்பா கல்லூரி மாணவர்களிடையே தாக்குதல் நடைபெற்றதாகவும், ரூட் தல பிரச்சினையால் இந்த மோதல் ஏற்பட்டது என்பதும்  தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து வரும் அமைந்தகரை, அரும்பாக்கம் போலீசார், மாணவர்கள் சுருதி, மதன் ஆகியோரைக் கைது செய்தனர். தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்