சென்னை : பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை
x
சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில், சட்ட ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்தவர் உமா லட்சுமி. அலுவல் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற உமா லட்சுமி உடை மாற்றிவிட்டு வருவதாக கூறி அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்த பெற்றோர் உள்ளே உமா லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டினபாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்