"ஒருபோதும் நெக்​ஸ்ட் தேர்வை அனுமதிக்கமாட்டோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : ஜூலை 22, 2019, 07:19 PM
சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் விபத்துக்கால மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது என்றும், ஒருபோதும் மருத்துவத் துறையில் நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குடிமராமத்து திட்டத்தின் கீழ், 26 லட்சம் ரூபாய் செலவில் கண்மாயை தூர்வாரும் பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதாவுக்கு சால்வை அணிவித்து கவுரவித்ததோடு,  50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் ஒன்று முதல் மருத்துவ படிப்பிற்கான, முதலாமாண்டு  வகுப்புகள் தொடங்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பில்,  விபத்து கால மறுவாழ்வு மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். மருத்துவத் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட 108 திட்டங்களை அமல்படுத்த, அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், நெக்ஸ்ட் தேர்வை முதன்  முதலில் எதிர்த்தது தமிழக அரசு தான் என்றும் அமைச்சர் விஜயபா​ஸ்கர் தெரிவித்தார். 
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.