வேலுார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 10 துணை ராணுவம் கம்பெனி - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா

வேலுார் நாடாளுமன்ற தேர்தலின் போது 850 வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வேலுார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 10 துணை ராணுவம் கம்பெனி - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா
x
வேலுார் நாடாளுமன்ற தேர்தலின் போது 850 வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க  திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,  புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். வேலுார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக  10 கம்பெணி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 துணை ராணுவம் கம்பெணி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமளில் உள்ளதால் வேலுாரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 2கோடியே 38லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 89.41லட்சம் மதிப்பிளான 2.98கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்தியபிரதா சாஹு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்