இந்திய கம்யூ. கட்சி பொதுச்செயலாளராக டி.ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் தேசிய செயலாளருமான டி.ராஜா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூ. கட்சி பொதுச்செயலாளராக டி.ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்த சுதர்சன் ரெட்டி தனது உடல் நிலையை காரணம் காட்டி பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்தார். மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியை சந்தித்தை அடுத்து பதவி விலகும் விருப்பத்தை அவர் கட்சியில் தெரிவித்தார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் புதுடெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக யாரை நியமிப்பது என ஆலோசிக்கப்பட்டது. இதில் தற்போதைய தேசிய செயலாளரான டி.ராஜா, கேரளத்தை சேர்ந்த பினோய் விஸ்வம், மூத்த தலைவர் அமர்ஜெத் கவுர், அதுல்குமார் அஞ்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கூட்ட முடிவில் டி.ராஜாவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிப்பது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற கட்சியின் தேசிய குழுக்கூட்டத்துக்குப் பிறகு, டி.ராஜாவின் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

டி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து :



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றின் பாதுகாவலராக, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் உரிமைக்குரலாக விளங்கும் ராஜா மென்மேலும் பல வெற்றிகளை பெற்றிட வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்