மருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்
பதிவு : ஜூலை 19, 2019, 05:57 PM
மாற்றம் : ஜூலை 19, 2019, 05:58 PM
தேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
தேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் , எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், எக்சிட் தேர்வு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேசிய மருத்துவ கழக மசோதவை, 2016 லேயே நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சித்தது என்றும், தற்போது மீண்டும் கொண்டுவர முயற்சித்து வருகிறது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு எக்சிட் தேர்வை நடத்தக்கூடாது என்றும், அதை ஏற்கவும் மாட்டோம் என அமைச்சர் உறுதி அளித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்தும் போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.