"சந்திரயான் 2 நிலவில் விண்வெளி ஆய்வு நிலையம் அமைய உதவியாக இருக்கும்" - மயில்சாமி அண்ணாதுரை தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பல்கலைக் கழகம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
சந்திரயான் 2 நிலவில் விண்வெளி ஆய்வு நிலையம் அமைய உதவியாக இருக்கும் - மயில்சாமி அண்ணாதுரை தகவல்
x
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பல்கலைக் கழகம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், கடந்த 2008ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் நிலவில் நீர் உள்ளதை கண்டறிந்து கூறியதால் மற்ற உலக நாடுகளும் நிலவுக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக கூறினார். இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான் 2 விண்கலம் நிலவில் இயற்கையான விண்வெளி ஆய்வு மையம் அமைய உதவியாக இருக்கும் என்றார். ஆம்ஸ்ட்ராங் இறங்கிய அதே தென்துருவத்தில் நமது சந்திரயான்-2 விண்கலம் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பது பெருமையான தருணம் என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்