10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
x
10,11,12  ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து பள்ளிக்கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ம் வகுப்பு தேர்வுகள், அடுத்த ஆண்டு மார்ச் 17 முதல், ஏப்ரல் 9 ம் தேதி வரையிலும், 11 ம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 4 ஆம் முதல் 26 ம் தேதி வரையிலும், நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போல், 12ம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 2 ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரையிலும் நடைபெறும் என, தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்படும் என்றும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், அடுத்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே 4 ம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்