50 ஆண்டுகளாக தொடரும் புறாக்க‌ள் பந்தயம்... 6 மணி நேரம் பறக்கும் புறாக்கள்

கரூரில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் புறாக்கள் பந்தயம், இந்த ஆண்டும் களை கட்டியது.
x
கரூர் நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் வைரபெருமாள் நினைவாக அவரது மகனும் அதிமுக கரூர் நகர செயலாளருமான வை.நெடுஞ்செழியன் ஆண்டு தோறும் புறா பந்தயம் நடத்தி வருகிறார். இன்று இந்த பந்தயம் 50 ஆவது ஆண்டை எட்டியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்றைய போட்டியில் 10 புறாக்கள் பங்கேற்றுள்ளன. போட்டி தொடங்கிய உடன் புறாக்களின் உரிமையாளர்கள் புறாக்களை ஒன்றாக பறக்கவிட்டனர். காலை 7 மணிக்கு பறக்க விடப்பட்ட இந்த புறாக்கள், தொடர்ந்து 6 மணி நேரம் வரை பறக்க வேண்டும் என்பது விதி. இதே போல அடுத்த மாதம் கர்ண புறாக்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. அதன்படி, கர்ணம் அடித்துகொண்டே அதிக நேரம் பறக்கும் புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.  இந்த போட்டிகளில் வெற்றிபெறும் புறாக்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்க உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்