மாம்பழப்பட்டு உடுத்தி அருள் பாலிக்கும் அத்திவரதர் - காத்திருந்து தரிசித்து வரும் பக்தர்கள்

17-வது நாளான, இன்று வண்ண வண்ண மலர்களால் அலங்கரிங்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் அத்திவரதர் மாம்பழப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாம்பழப்பட்டு உடுத்தி அருள் பாலிக்கும் அத்திவரதர் - காத்திருந்து தரிசித்து வரும் பக்தர்கள்
x
புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதி அத்தி வரதர் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கிய இந்த வைபவத்தில் கடந்த 16 நாட்களில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

நாள்தோறும் வண்ண வண்ணப் பட்டாடைகள், மலர்களால் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, சுப்ரபாத சேவைக்கு பின் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் .  

17 வது நாளான இன்று மாம்பழ நிற பட்டாடை உடுத்தி, பஞ்சவர்ண மற்றும் துளசி மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ள பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

மூன்றாவது முறையாக இன்று வசந்த மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, இதமான சூழலில் பெருமாளை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். 

பக்தர்கள் வசதிக்காக இரண்டாவது நிழற்பாதை,  சுமார் 3 ஆயிரம் பேர் செல்லும் வசதியுடன் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.  இதில் குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. வசந்த மண்டபத்தில் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்ல வசதியாக புதிய வழி உருவாக்கப்பட்டு உள்ளது.  அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்