மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் தெப்பத்திருவிழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் தெப்பத்திருவிழா
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், 9 நாட்கள் ராஜகோபால சுவாமி யானை, ஹனுமான், வெள்ளி சேஷ வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழாவில், ராஜகோபால சுவாமி பாமா, ருக்மணியுடன் கிருஷ்ண அலங்காரத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்