மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க வகை செய்ய வேண்டும் : சுகாதாரத்துறை செயலரிடம், விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு

80 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து தெளிவாக வரையறை செய்யாதது ஏன்? என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க வகை செய்ய வேண்டும் : சுகாதாரத்துறை செயலரிடம், விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு
x
80 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து  தெளிவாக வரையறை செய்யாதது ஏன்? என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த மாணவி ஷகிலா தொடர்ந்த வழக்கில், ஒரே பாதிப்புக்கு இருவேறு சதவிகித சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்று திறனாளிகள், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று வரையரை உள்ள நிலையில், 85 சதவிகித பாதிப்பு  உள்ள தாம் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத் துறை செயலரிடம் விளக்கம் பெற்று தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்