அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
x
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சமர்ப்பித்த ஆணவ புத்தகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அரசு பள்ளிகளில் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் 44 லட்சத்து 13 ஆயிரத்து 336 பேர் மட்டுமே சேர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை 23 லட்சத்து 99 ஆயிரத்து 17 இல் இருந்து  22 லட்சத்து 31 ஆயிரத்து 88 ஆக குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை  52 லட்சத்து 71 ஆயிரத்து 543 இல் இருந்து, 64 லட்சத்து 81 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. 

அரசு பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன எனவும், மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகின்றன எனவும், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கல்வியாளர்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Next Story

மேலும் செய்திகள்