இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தரும் அத்திவரதர்...

காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்று அத்திவரதர் உற்சவம்.
x
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்று அத்திவரதர் உற்சவம். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உற்சவத்தில், வரதராஜ பெருமாள் கோவிலின் தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுக்கப்பட்டு 48 நாட்களுக்கு பூஜை நடத்துவார்கள். 48 நாட்களுக்கு பின்னர் மீண்டும் சிலையை நீருக்கடியில் வைத்து விடுவார்கள். ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்வத்தின் 16வது நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஏலக்காய் மாலை, தாமரைப்பூ மாலை, செண்பகப்பூ மாலை உள்ளிட்டவை அணிவித்து, நெய்வேதியம் செய்து அதிகாலை 5 மணிக்கு அத்திவரதரின் நடை திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர். தமிழக அமைச்சர் பாஸ்கரன், திரைப்பட நடிகர் ராதாரவி ஆகியோர் அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்து சென்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், 15வது நாளான நேற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த 15 நாட்களில் இதுவரை சுமார் 17 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்