கிடப்பில் போடப்பட்ட சென்னை- புதுச்சேரி - கடலூர் வரையான ஈ.சி.ஆர். தடம்...

சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரையான ஈ.சி.ஆர் மார்க்க ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை ஈ.சி.ஆர். மார்க்கத்தில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2008 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த 523 கோடி ரூபாய் நிதியை, அப்போதைய மத்திய அரசு ஒதுக்கியது. முதல்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன. கிடப்பில் உள்ள கிழக்கு கடற்கரை மார்க்க ரயில் பாதை அமைக்கும் பணிகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பயணிகளை அதிகம் ஈர்க்கும், நீண்ட கடற்கரை பயணமாக இருக்கும்.

Next Story

மேலும் செய்திகள்