தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
x
 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. சட்டசபை கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை, இந்து சமய அறநிலையத் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. பொதுப்பணித்துறை தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார். மேலும், துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், அறநிலையத் துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் பதில் அளிக்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்