தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை : நாகையில் 2 பேர் கைது

நாகையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 2 பேர் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை : நாகையில் 2 பேர் கைது
x
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று நாகப்பட்டினம் அருகே சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முஹம்து மற்றும் சென்னையை மண்ணடியை சேர்ந்த சையது முகமது புகாரி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 9 மொபைல் போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப், 6 ஹார்ட் டிஸ்க், 7 பென் டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து 3 பேரும் கைது கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெளிநாடுகளில்  இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்று, அன்சாருல்லா என்ற இயக்கத்தை உருவாக்கி இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

நாகையில் கைது செய்யப்பட்ட ஹாரிஸ் முஹமது, அசன்அலி ஆகியோரை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவு 12 மணி வரை தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இருவரையும் இன்று காலை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கும் மேற்கொண்டு விசாரணை நடத்தி 3 பேரையும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  திட்டமிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்