சத்தியமங்கலம் : புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்
பதிவு : ஜூலை 14, 2019, 07:44 AM
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் மர்ம நபர்கள் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் ஜான்சன் தலைமையில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஒரு காரில் கையில் துப்பாக்கியுடன் இருந்த 4 நபர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி மற்றும் மானின் உடலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 4 பேரையும் சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அருண்லால் முன்னிலையில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். 4 பேருக்கும் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்... 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சத்தியமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

2507 views

சத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

1055 views

காரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

சத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

376 views

பிற செய்திகள்

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

27 views

மக்களவை தேர்தல்:"தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" - அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

14 views

வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிட வேலூர் தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெறுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

24 views

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

52 views

புதிய கல்வி கொள்கை - சூர்யா கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு...

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

34 views

வரத்து அதிகரிப்பு எதிரொலி - காய்கறிகள் விலை வீழ்ச்சி...

வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிவிலை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.