மோடி ஆட்சியில் 4.70 கோடி பேர் வேலை இழப்பு - ப.சிதம்பரம்

பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலை வாய்ப்பு குறைந்தது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் ஒருவார்த்தை கூட இடம்பெறவில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
x
மத்திய நிதி நிலை அறிக்கை ஓர் ஆய்வு என்கிற தலைப்பில் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு உரையாற்றினார்.மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கு 42 சதவீதத்தை பிரித்து தருவது வழக்கம் என்றும், ஆனால் நடப்பு நிதியாண்டில் வெறும் 33 சதவீதம் தான் மத்திய அரசு தரும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார். தாம் சொல்வதை ஆராய்ந்து உண்மையாக இருந்தால், இதை கண்டித்து மாநில அரசுகள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார். கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டிற்கும், கடைசி காலாண்டிற்கும் இடையே இரண்டரை சதவீதம் குறைந்திருப்பது குறித்து, நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிடவில்லை என்றும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.நான்கு கோடியே 70 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தது தான் மோடி ஆட்சியின்  சாதனை என்றும் ப.சிதம்பரம் விமர்சித்தார்.வேலைவாய்ப்பு சுருங்கியது மற்றும் தொழில் குறியீட்டு எண் சுருங்கியது உள்ளிட்டவற்றை ஆய்ந்து போடப்பட்ட பட்ஜெட் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.வரி விவகாரத்தில் ஆசைப்படலாம், பேராசைப்பட கூடாது என்றும், ஆனால் மத்திய அரசு பேராசைப்படுவதாக ப.சிதம்பரம் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்