கருணாநிதி தாயாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி தாயாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
x
திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞரணியை வலுபடுத்தும் பணியில் ஈடுபட உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் திருவாரூர் வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் காட்டூரில் உள்ள, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின், பூண்டி கலைவாணன் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்