"பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பாஜக திட்டம்" - கனிமொழி

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக போராட வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
x
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி.கனிமொழி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், பொதுத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை நிறுவனங்களையும் தனியார் மயமாக்க கூடிய செயலை பா.ஜ.க. துவக்கி உள்ளதாக குற்றம்சாட்டினார். இதை எதிர்த்து  அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்