குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்...

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
x
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு 2-ஆம் நாளான இன்று, கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் நூர்முகமது, குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் குதிரையை வெளியே நிறுத்திவிட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சண்முக சுந்தரத்திடம் வேட்புமனுவை வழங்கினார். அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்ட நிலையில் உறுதிப்பத்திரத்தை படித்துப்பார்த்த ஆட்சியர், பின்னர் அவரது வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்