விளையாட்டு வீரர்களுக்கு 10 % இடஒதுக்கீடு : பேரவையில் தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

விளையாட்டு வீரர்களுக்கு, கல்வி, வேலை வாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தி.மு.க வலியுறுத்தியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு 10 % இடஒதுக்கீடு : பேரவையில் தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
x
விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க கோரி, தி.மு.க.  கொறடா சக்கரபாணி, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் பேசிய அவர், கல்வி, வேலை வாய்ப்புகளில் உள்ள 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல் பள்ளிகளில் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், கிராமங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள வருவாய் மற்றும் இந்து அறநிலையத்துறை இடங்களை விளையாட்டு மைதானங்களாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டு வீரர்களுக்கு, பூஜ்ஜியத்தில் இருந்து, 3 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்திருப்பது மிகப்பெரும் சாதனை என விளக்கம் அளித்தார். விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், 267 அரசு பள்ளிகளில், 5 ஏக்கருக்கும் அதிகமாக இடம் இருப்பது கண்டறியப்பட்டு,  அந்த இடங்கள் விளையாட்டு மைதானங்களாக உருவாக்கப்படும் என்றும், அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்