தொழில் போட்டியால் ஏற்பட்ட விரோதம் : நடுரோட்டில் இளைஞர் வெட்டி கொலை

தொழில் போட்டி காரணமாக ஆரணி பேருந்து நிலையம் அருகே நடுரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தொழில் போட்டியால் ஏற்பட்ட விரோதம் : நடுரோட்டில் இளைஞர் வெட்டி கொலை
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த யோகானந்தம் மற்றும் அவரின் உறவினர் பாண்டியன் ஆகியோர் காட்டன் சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே யோகானந்தம் நடத்தி வரும் டீக்கடைக்கு வந்த பாண்டியன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், பாண்டியன் மறைத்து  வைத்திருந்த கத்தியால் யோகானந்தத்தை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் யோகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சம்வ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் யோகானந்தத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  தகவலறிந்த  யோகானந்தத்தின் உறவினர்கள் ஆரணி அரசு  மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.  பின்னர், ஆரணி ஆற்றுபாலம் அருகில் பதுங்கிருந்த பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்