நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகள் பலரின் பெயரும் இடம்பெறவில்லை என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடியின் குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்