ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதி நவீன அச்சு இயந்திரம் : பாலசுப்ரமணிய ஆதித்தன் தொடங்கி வைத்தார்

பத்திரிகை உலகில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுவதில் முன்னோடியாக உள்ள தினத்தந்தி நாளிதழ், ஜப்பானில் இருந்து அதிநவீன இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது.
x
பத்திரிகை உலகில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுவதில் முன்னோடியாக உள்ள தினத்தந்தி நாளிதழ், ஜப்பானில் இருந்து அதிநவீன இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. அதனை தினத்தந்தி குழும நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணிய ஆதித்தன் துவக்கி வைத்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். 

பிராந்திய மொழிகளில் அதிக வாசகர்களை கொண்ட ஒரே நாளிதழ் என்ற பெருமை கொண்டது தினத்தந்தி... கோடிக்கணக்கான வாசகர்களை பெற்ற தினத்தந்தி, பத்திரிகை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது.

புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதிலும் முன்னோடியாக இருக்கிறது தினத்தந்தி நாளிதழ்... அதற்கு உதாரணமாக திருச்சியில் அதிநவீன இயந்திரம் ஒன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 'செய்கான் 77' என்ற அதிநவீன அச்சு இயந்திரமானது ஒரு மணி  நேரத்தில் 70 ஆயிரம் பிரதிகளை எடுக்க கூடிய திறன் கொண்டது.

திருச்சி துவாக்குடியில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணிய ஆதித்தன் துவக்கி வைத்தார். பின்னர் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். 

திருச்சி - தஞ்சை பதிப்புகளை இணைக்கும் வகையில் இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த அதிநவீன அச்சு இயந்திரமானது பல வண்ணங்களில் அதிவேகமாக அச்சிடும் திறன் வாய்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்