15 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்முறை... அயனாவரம் சம்பவம் போல சென்னையில் மீண்டும் பயங்கரம்
பதிவு : ஜூலை 11, 2019, 03:03 PM
கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தில் பள்ளி சிறுமி ஒவரை 13 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் புளியந்தோப்பில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 15 வயதான அந்த சிறுமி வீட்டில் தன் பாட்டியுடன் கோபித்துக் கொண்டு கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  பின்னர் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெபினா என்ற பெண்ணிடம் அடைக்கலம் புகுந்துள்ளார். முசினா பேகம் என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்ட ஜெபினா சிறுமியை புரசைவாக்கத்தில் உள்ள நிஷா என்ற பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மது வாங்கிக் கொடுத்து அந்த போதையில் வைத்தே அந்த கும்பல் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து 4 நாட்களாக வன்கொடுமை செய்துள்ளது. இதனிடையே சிறுமியை காணவில்லை என கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் உடலில் காயங்களுடன் கடந்த 7ஆம் தேதி சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் சிறுமி கூறியதை தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 3 பெண்களை கைது செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரை தேடி வருகின்றனர். மேலும் சிறுமியிடம் குழந்தைகள் நல குழும அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7211 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1670 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4815 views

பிற செய்திகள்

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு : மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாக ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2 views

பூக்குழியில் விழுந்து பூசாரி படுகாயம் : பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியீடு

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது..

19 views

பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு - "புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

கஞ்சா போதையோடு வந்த கும்பல் சரமாரி தாக்குதல்

தாம்பரம் அருகே கஞ்சா போதையோடு வந்த 10 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

155 views

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒடிசாவை சேர்ந்த தம்பதியின் 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

112 views

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா..

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.