வியாபாரிகளுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர் - நெல் சாகுபடி விவசாயிகள் குற்றச்சாட்டு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க காலம் தாழ்த்தும் அதிகாரிகள் வியாபாரிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
x
கடலூர் மாவட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க காலம் தாழ்த்தும் அதிகாரிகள், வியாபாரிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் கொள்முதல் நிலையங்களை தாமதமாக திறப்பதால், அறுவடை செய்த நெல்களை வியாபாரிகளிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அதை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாகும். 

Next Story

மேலும் செய்திகள்