அனிதா மரணத்திற்கு காங். தான் காரணம் - சுகாதாரத்துறை விஜயபாஸ்கர்

அரியலூர் அனிதா மரணத்திற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.
அனிதா மரணத்திற்கு காங். தான் காரணம் - சுகாதாரத்துறை விஜயபாஸ்கர்
x
இதனிடையே, அரியலூர் அனிதா மரணத்திற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கீடு செய்யக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், நீட் தேர்வு தொடர்பான  வழக்கில் நளினி சிதம்பரத்தின் பேச்சால் தான், அனிதா மரணம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். இதற்கு முழு காரணம் காங்கிரஸ் தான் எனக் குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்