ஆர்டிஒ அலுவலகத்தில் ஆம்னி பஸ் திருட்டு
பதிவு : ஜூலை 10, 2019, 06:44 PM
திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்ஸை திருடிச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதி பெறாமல் ஓட்டப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை கடந்த டிசம்பர் மாதம் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த செஷன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார், திருடனையும், ஆம்னி பஸ்சையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு கைது செய்துள்ளனர். தூத்துக்குடி வேம்பார் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த சுயம்பு மற்றும் அவரது சகோதரர் ராமலிங்கம் ஆகியோர் ஆம்னி பஸ் வாங்கி அனுமதி இல்லாமல் ஓட்டி வந்த நிலையில் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் 
பறிமுதல் செய்யப்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை இவர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் பேருந்தையும் பறிமுதல் செய்தனர். 

பிற செய்திகள்

சர்வதேச படகு வடிமைப்பு போட்டி : எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து மாணவர்கள் சாதனை

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச படகு வடிவமைப்பு போட்டியில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவர் குழு, எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து சாதனை படைத்தது.

3 views

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்: "சட்டப்பேரவையில் விளக்கம் தரப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

அஞ்சல் துறை தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

7 views

"அஞ்சல் துறை தேர்வு - இந்தி மட்டும் என்பதை மாற்ற வேண்டும்" - அமைச்சர் பாண்டியராஜன்

அஞ்சல் துறை தேர்வில் இந்தி மட்டும் என்பதை மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

11 views

கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

2 views

குளம் போல காட்சியளிக்கும் மேல்ஆலத்துர் ரயில்வே கீழ் தரைப்பாலம்

வேலூர், குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்துர் ரயில்வே தரைப்பாலம் குளம் போல காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

29 views

அனுமதி இல்லாமல் மருதுபாண்டியர்கள் சிலை : சிலை வைத்த அமைப்புகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில், அனுமதி இல்லாமல், மருதுபாண்டியர்கள் சிலை வைப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.