சென்னை விமான நிலையத்துக்கு நோட்டீஸ்

விமான நிலையத்தை முறையாக பராமரிக்காதது தொடர்பாக 15 நாளில் பதிலளிக்க சென்னை, அகமதாபாத் விமான நிலையங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு நோட்டீஸ்
x
நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து  உள்ள நிலையில், கடந்த ஜூன்  30 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 6 விமானங்கள் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு விமான நிலையங்கள் முறையாக பராமரிப்பு இல்லாதது தான் காரணம் என தெரிய வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்கம் குழுவை அமைத்தது. 

இந்த குழுவினர் கடந்த 2ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் ஆய்வு நடத்தினர். விமான ஓடுதள பாதை, மழைநீர் வடிகால் வசதிகள், வழிகாட்டும் கருவிகள், விளக்குகள், குறியீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை, அகமதாபாத் விமான நிலையங்கள் மோசமான பராமரிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள்  பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. உரிய பதில் அளிக்காத நிலையில், தாங்களாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நோட்டீசில், சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்