மாம்பழ சங்க துவக்க விழாவில் இரு தரப்பினர் மோதல் - பேராயர் கிறிஸ்துதாஸ் பங்கேற்றதற்கு எதிர்ப்பு

நெல்லையில் மாம்பழ சங்க விழாவின் துவக்க விழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
மாம்பழ சங்க துவக்க விழாவில் இரு தரப்பினர் மோதல் - பேராயர் கிறிஸ்துதாஸ் பங்கேற்றதற்கு எதிர்ப்பு
x
திருநெல்வேலி திருமண்டலத்தின் சார்பில் ஆண்டு தோறும் மாம்பழ சங்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 239ஆவது ஆண்டு விழா இந்த ஆண்டு கோலாகலமாக தொடங்கிய நிலையில், நெல்லை திருமண்டல பேராயர் கிறிஸ்துதாஸ் தனது ஆதரவளர்களோடு கலந்து கொண்டார். பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளான பேராயர் கிறிஸ்துதாஸ் விழாவில் கலந்து கொள்ள ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.  இதற்கு பேராயர் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், விழா நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, இரு தரப்பினரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து,  கிறிஸ்துதாஸ், உள்ளிட்ட அனைவரும் விழாவை நிறுத்திவிட்டு வெளியேறினர். இந்நிலையில், காவல்துறை அனுமதியையும் மீறி விழாவை ஒரு தரப்பினர் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்